உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிலம்ப போட்டியில் தேசிய சாதனை

சிலம்ப போட்டியில் தேசிய சாதனை

ஈரோடு :தேசிய அளவிலான சிலம்பம் போட்டி புதுடில்லியில் நடந்தது. இதில் ஈரோடு கொங்கு கல்வி நிலையம், ரங்கம்பாளையம் பள்ளி மாணவன் ஸ்ரீஹரி, கண்ணை கட்டிக்கொண்டு சிலம்பம் விளையாட்டில் முதலிடமும், பதினான்கு வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஒற்றைக்குச்சி (சிங்கிள் ஸ்டிக்) விளையாட்டில் வெண்கல பதக்கமும் பெற்றார்.பள்ளி தலைவர் சின்னச்சாமி, பள்ளி தாளாளர் செல்வராஜ், பொருளாளர் குணசேகரன் மற்றும் உதவி தலைவர்கள் சோமசுந்தரம், தெய்வசிகாமணி, இணை செயலாளர் மீனாட்சிசுந்தரம், இணை பொருளாளர் நாகராஜன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், பாராட்டி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை