உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா

அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா

ஈரோடு :நவராத்திரி விழா இரண்டாவது நாளான நேற்றிரவு, ஈரோடு பெரியமாரியம்மனுக்கு, வைஷ்ணவி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனை நடந்தது.இதேபோல் சூரம்பட்டி நால்ரோடு வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில் துர்கை அம்மனுக்கு மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரம் செய்து பூஜை நடந்தது.கோவில் வளாகத்தில் கொலு பொம்மை வைத்து, பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடினர். சூரம்பட்டி பாவாத்தம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு ஸ்ரீஸ்கந்த தேவி அம்மன் அலங்காரம் செய்யபட்டிருந்தது. இதேபோல் மாநகரில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களிலும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஞாயிற்றுகிழமை அமாவாசை, திங்கள் வெறுமானம் என்பதால் நேற்று முதல் அனைத்து கோவில்களிலும் நவராத்திரி விழா தொடங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ