உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிவேரி அணைக்கட்டு அருகில்

கொடிவேரி அணைக்கட்டு அருகில்

ஆகாயத்தாமரையால் சுற்றுலா பயணிகள் அச்சம்டி.என்.பாளையம், நவ. 3--டி.என்.பாளையம் அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு தினமும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். விடுமுறை நாட்களில் இதன் எண்ணிக்கை மேலும் உயரும். தீபாவளி பண்டிகை விடுமுறையால் மூன்று நாட்களில், 20,000க்கும் மேற்பட்டோர் வந்தனர். அணைக்கட்டில் இருந்து சிறிது தொலைவிலேயே பவானி ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள், புதர் போல் வளர்ந்துள்ளது. இதில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் அணைக்கட்டுக்கு குளிக்க வரும் சிறுவர், சிறுமியர், வயதானோர் அச்சத்துடன் இருக்க வேண்டியுள்ளது. தடுப்பணையில் குளிக்க நுழைவுக்கட்டணம் வசூலிக்கும் நீர்வளத்துறை அதிகாரிகள், ஆகாயத்தாமரை மற்றும் முட்புதரை அகற்றி, சுற்றுலா பயணிகளின் அச்சத்தை போக்க வேண்டும் என்று, கோரிக்கை எழுந்துள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி