மேலும் செய்திகள்
கோட்டை பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா
31-Jan-2026
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே காடையூரில், பிரசித்தி பெற்ற காடையீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் ஏற்கனவே இருந்த தேருக்கு பதிலாக இரும்பு சக்கரங்களுடன் புதிய தேர் வடிவமைக்கப்பட்டது. பழமை மாறாமல் விநாயகருக்கு சிறிய தேரும், காடையீஸ்வரன் மற்றும்பங்கசாட்சியம்மனுக்கு பெரிய தேரும் என இரு தேர் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வெள்ளோட்டம் நடந்தது. முன்னதாக காலை, 9:௦௦ மணியளவில் பூர்வாங்க கிரியைகளுடன் விநாயகர் வழிபாடு, யாக பூஜை நடந்தது. மதியம், 3;00 மணிக்கு மேல் தேர்களுக்கு கலசாபிஷேகம் நடந்தது. இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், புதிய தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். பக்தி கோஷத்துடன் மேளதாளங்கள் முழங்க, கோவிலை சுற்றி வந்து தேர் நிலை அடைந்தது. திருப்பூர் மட்டுமின்றி ஈரோடு, கோவை, நீலகிரி, திண்டுக்கல், கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
31-Jan-2026