நாளை கடையடைப்பு இல்லை
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், ஈரோடு மாவட்ட தலைவர் ஆர்.கே.சண்முகவேல் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வாடகை கட்டடங்களுக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிப்பு புதிய சட்டத்தை நீக்க கோரி, வரும் டிச., 11ல் தமிழகம் முழுவதும் வணிகர்கள் கண்டன ஆர்ப்-பாட்டம் நடத்த பேரமைப்பு அறிவித்துள்ளது. அகில இந்திய வணிகர் சம்மேளனம் அடுத்த வாரம் டில்லியில் கூடி, அனைத்து தரப்பு வணிகர்கள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண திட்டமிட்டுள்ளது. தேசிய அளவில் அனைத்து மாநில வணிகர் சங்கங்கள் ஒன்றிணைந்து, 'காலவரையற்ற கடைய-டைப்பு' செய்ய ஆலோசிக்கப்பட உள்ளது.ஆகையால், ஒரு மாவட்டத்தில் மட்டும் கடையடைப்பு செய்-வது, மக்கள், வியாபாரிகளுக்கு சிரமத்தை உருவாக்கும். எனவே, ஈரோடு மாவட்டத்தில் வரும், 29ல் நடக்க உள்ள கடைய-டைப்பில் பங்கேற்கவில்லை. ஈரோடு மாவட்டத்தில், அன்று அனைத்து கடைகளும் வழக்கம் போல செயல்படும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.