உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அறிவிப்பதோ 5 மணி நேரம் தடைபடுவதோ 9 மணி நேரம்

அறிவிப்பதோ 5 மணி நேரம் தடைபடுவதோ 9 மணி நேரம்

கோபி, கோபி துணை மின் நிலையத்தில், நேற்று காலை, 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை, மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் அறிவித்தனர். காலையில் மிகச்சரியாக 9:00 மணிக்கு மின் நிறுத்தம் செய்தனர். ஆனால், அறிவித்தபடி மதியம், 2:00 மணிக்கு மின் இணைப்பு வழங்காமல், ௪:௦௦ மணி நேரம் கூடுதலாக மின் தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் மட்டுமின்றி தொழில் நிறுவனத்தினரும் பாதித்தனர். மாதந்தோறும் இப்படித்தான் நடக்கிறது. கூடுதலாக, ௪:௦௦ மணி நேரம் மின் நிறுத்தம் செய்வதாக அறிவித்து விட்டே செய்யலாமே? அதை விடுத்து அறிவிக்காமல் மின் தடை நீடிப்பதால், பணிகளை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இடையூறு ஏற்படுகிறது. எனவே வரும் காலங்களில், கோபி மின்வாரியம் மின் தடை நேரத்தை முறையாக கடைபிடிக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ