உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு, தமிழ்நாடு சுகாதார செவிலியர் சங்க கூட்டமைப்பு சார்பில், ஈரோடு திண்டலில் உள்ள துணை இயக்குனர் (சுகாதாரம்) அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் லோகநாயகி தலைமையில் நேற்று நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் பழநி, தொப்பம்பட்டி வட்டாரம், வாகரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களை, கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த, தந்தை மற்றும் மகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை