நாட்ராயசுவாமி கோவிலில்ரூ.12.49 லட்சம் காணிக்கை
வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே பிரசித்தி பெற்ற நாட்ராயசுவாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி பிற மாநில பக்தர்களும் தரிசனத்துக்கு வருகின்றனர். நான்கு மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம், கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது.இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினாம்பாள், ஆய்வர் அபிநயா முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில், 12.௪௯ லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. கோவில் செயல் அலுவலர் மாலதி மற்றும் அறங்காவலர் குழுவினரும் உடனிருந்தனர்.