உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓய்வு அரசு டிரைவரை மனு கொடுக்க விடாமல் வெளியேற்றிய அதிகாரிகள்

ஓய்வு அரசு டிரைவரை மனு கொடுக்க விடாமல் வெளியேற்றிய அதிகாரிகள்

பவானி, பவானி யூனியன் பெரியபுலியூர் பஞ்.,ல், மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால சுன்காரா முன்னிலையில், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மக்களிடம் மனுக்களை பெற்றார். பெரியபுலியூரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் ராஜேந்திரன், 62; தற்போது பாதுகாவலராக பணிபுரிகிறார். பட்டா மாறுதல் வேண்டி, ஆறு மாதங்களாக தாசில்தார், கலெக்டர் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் அமைச்சரிடம் மனு கொடுக்க வேண்டும். இதற்கு அதிகாரிகள் பதில் சொல்லுங்கள் என்று கூறியபடி, மேடையின் முன்பக்கம் சென்று ராஜேந்திரன் நின்றார். அங்கிருந்த அதிகாரிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை தடுத்து அரங்கை விட்டு வெளியே அனுப்பினர். இதுகுறித்து அவர் கூறியதாவது: காலை, 9:௦௦ மணி முதல் முகாமுக்கு வந்து காத்திருந்தேன். தொடர்ந்து அதிகாரிகள் வேறு நபரை பாருங்கள் வேறு நபரை பாருங்கள் என அலைக்கழித்தனர். கலெக்டர், அமைச்சரை சந்திக்க மனு கொடுக்கும் போது, தடுத்து நிறுத்தி வெளியே அனுப்பி விட்டார்கள். இவ்வாறு கூறினார்.* அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூர் பொம்மன்பட்டியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் மனுக்களை பெற்றார். ஒன்பது பயனாளிகளுக்கு, 11.85 லட்சம் மதிப்பில் மானியத்துடுன் கூடிய கறவை மாடு, பயிர்க்கடன் மற்றும் தொழிலாளர் நல வாரிய அட்டை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை