உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவு குறித்து அதிகாரி அறிவுறுத்தல்

வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவு குறித்து அதிகாரி அறிவுறுத்தல்

தாராபுரம்: தேர்தல் செலவு தொடர்பான விதிகள் குறித்து, வேட்பாளர்க-ளுக்கு, தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, தாராபுரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலு-வலர் பெலிக்ஸ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதா-வது:தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது தேர்தல் தொடர்பான செலவி-னங்களை, முறையாக அதற்கான பதிவேட்டில் பராமரிப்பதும், தேர்தலுக்கு முன் குறிப்பிட்ட கால இடைவெளியில், தங்களின் செலவின கணக்குகள் மற்றும் பதிவேடுகளை, தேர்தல் செலவின பார்வையாளர் முன் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, ஏப்ரல் 11, 16, 20 தேதிகளில், காலை 10:00 மணியளவில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வேட்பாளரோ அல்-லது அவரது தேர்தல் முகவரோ, தேர்தல் செலவின பார்வையாளரிடம், தேர்தல் செலவின கணக்குகளை, தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை