மேலும் செய்திகள்
தி.மு.க., மகளிரணி ஆலோசனை
09-Oct-2024
காங்கேயம்: தி.மு.க., சார்பில் மாவட்டம் தோறும் நுாறு பேச்சாளர்களை கண்-டறியும் பொருட்டு, ஒரு மாதத்துக்கு முன் ஒவ்வொரு மாவட்-டத்திலும் பேச்சுப்போட்டி நடந்தது. இதன்படி திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. இதில், 98 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கழக உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனிதவள மேலாண்மைத்-துறை அமைச்சரும், மகளிரணி துணை செயலாளருமான கயல்-விழி செல்வராஜ் ஆகியோர், சான்றிதழ் வழங்கினர்.
09-Oct-2024