ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடம் திறப்பு
ஈரோடு :ஈரோடு மாநகராட்சி கருங்கல்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு, 60 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டி நேற்று திறக்கப்பட்டது. விழாவில் டாக்டர்கள், செவிலியர், பொதுமக்கள் பங்கேற்றனர். இங்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்கு பேரீச்சம்பழம், நெய், ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.