உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குண்டேரிப்பள்ளம் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

குண்டேரிப்பள்ளம் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே குன்றி மலையடிவாரத்தில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணை மூலம், 10க்கும் மேற்பட்ட கிராமங்-களில், 2,500 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி வருகிறது. அணை நீர்மட்டம் தற்போது, 40.21 அடியாக உள்ளது. விவசாயிகள் கோரிக்கையை தொடர்ந்து அணையில் இருந்து பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் ரத்தினகிரி, பணி ஆய்வாளர் குணசேகரன், பாசன சங்க தலைவர் குப்புராஜ் பூஜை செய்து, தண்ணீரை திறந்து விட்-டனர்.நவ.,4ம் தேதி வரை தண்ணீர் வழங்கப்படும். வலது கரையில், 8 கன அடி தண்ணீர், இடது கரையில், 16 கன அடி தண்ணீர், 46 நாட்களில், 10 நாட்கள் நிறுத்தப்பட்டு, 36 நாட்களுக்கு முறை வைத்து திறக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை