மேலும் செய்திகள்
வாய்க்காலில் மூழ்கி முதியவர் பலி
05-Sep-2024
ஆப்ரேட்டர் மரணம்போலீசார் வழக்குஈரோடு, செப். 29-ஈரோடு, கதிரம்பட்டியை சேர்ந்தவர் நடராஜன், 55. கதிரம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில், 20 ஆண்டுகளாக டேங்க் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தார். இவர் மனைவி மருதுபாண்டி அம்மாள், 42, மக்கள் நலப் பணியாளர். வழக்கம் போல் கடந்த, 26 இரவு சாப்பிட்டு விட்டு மோட்டார் அறைக்கு வேலைக்கு சென்ற நடராஜன் அங்கேயே தங்கியுள்ளார். மறுநாள் காலை, 9:00 மணியாகியும் வீட்டிற்கு வராததால், உறவினர்கள் நடராஜனுக்கு போன் செய்து பார்த்தனர். எடுக்காததால், உறவினர்கள் நேரில் சென்று பார்த்தனர். மோட்டார் அறையில் கட்டிலில் வாந்தி எடுத்த நிலையில் படுத்து கிடந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு நடராஜனை கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
05-Sep-2024