உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின் மயானத்துக்கு எதிர்ப்பு

மின் மயானத்துக்கு எதிர்ப்பு

ஈரோடு, பவானி, பி.மேட்டுப்பாளையம், நேரு வீதி பகுதியினர், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது:பி.மேட்டுப்பாளையம் டவுன் பஞ்.,ல் வசிக்கிறோம். இங்குள்ள நீர் வழி ஓடை புறம்போக்கில், மின் மயானம் அமைக்க உள்ளதாக அறிந்தோம். அந்த இடத்தை ஒட்டி, 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மின் மயானம் அமைந்தால் புகை, துர்நாற்றம், மக்களை பாதிக்கும். இதே இடத்தில் முன்பு, கால்நடை மருத்துவமனை கட்ட முனைப்பு காட்டியபோது, கலெக்டரிடம் ஓடை நீர் வழிப்புறம்போக்கு என்பதை சுட்டிக்கட்டியதும் அனுமதியை ரத்து செய்தார். தற்போது மின் மயானம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது. இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி