உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சியுடன் பஞ்.,களை இணைக்க எதிர்ப்பு

மாநகராட்சியுடன் பஞ்.,களை இணைக்க எதிர்ப்பு

ஈரோடு: ஈரோடு யூனியனில் உள்ள மேட்டுநாசுவம்பாளையம், எலவமலை, கதிரம்பட்டி, பேரோடு, பிச்சாண்டம்பாளையம், கூரப்பாளையம் பஞ்.,க்கள்; மொடக்குறிச்சி யூனியனில், 46 புதுார், லக்காபுரம் பஞ்.,க்களை, ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்க முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அரசாணை வெளியிடப்படவில்லை என்றாலும், அப்பகுதி மக்களுக்கு முறையாக அரசு தெரிவிக்கவில்லை. ஈரோடு யூனியனில் உள்ள ஆறு பஞ்சாயத்துக்களையும் மாநகராட்சியுடன் இணைத்தால், அந்த அமைப்பே இல்லாமல் போகும். எனவே அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி, த.மா.கா., மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ