அமைப்பினர் அறிமுக கூட்டம்
சென்னிமலை:முன்னாள் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'வி த லீடர்ஸ்' என்ற அமைப்பினை தொடங்கி ஆதரவாளர்களை திரட்டி வருகிறார். இந்த அமைப்பின் சென்னிமலை கிளையின் முதல் அறிமுக கூட்டம் சென்னிமலையில் நடந்தது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சென்னிமலை ஒன்றியம் முழுவதும் அமைப்புக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த ஆலோசிக்கப்பட்டது.