உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இயற்கை வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி பாத யாத்திரை

இயற்கை வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி பாத யாத்திரை

புன்செய்புளியம்பட்டி:மண் வளத்தை பாதுகாத்து, நீர் நிலைகளை மீட்டெடுப்பது, மரபு விதைகளை பாதுகாப்பது குறித்து, விவசாயிகள் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஏழு விவசாயிகள், 100 நாள் பயணமாக, பாதயாத்திரையை துவக்கியுள்ளனர். தாய் மண்ணே வணக்கம் அமைப்பை சேர்ந்த விவசாயிகள், மண் பயனுற வேண்டும், தமிழ் மரபையும் நிலத்தையும் காப்பது குறித்து பாதயாத்திரை துவக்கி உள்ளனர். கடந்த 2ம் தேதி, நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டாவில் பாதயாத்திரை துவக்கினர். நேற்று புன்செய் புளியம்பட்டி வந்த குழுவுக்கு, இயற்கை விவசாயிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள விவசாயி அரச்சலுார் செல்வம் கூறியதாவது: இந்த விழிப்புணர்வு பாதயாத்திரை, 100 நாட்கள், 2,000 கி.மீ., 15 மாவட்டங்கள் வழியாக பயணித்து, 2027 ஜன.,10ல் சென்னை கடற்கரையை அடைய திட்டமிட்டுள்ளோம். இதில் நந்தினி, சரோஜா, சுப்புலட்சுமி, சத்யா, ரிஷிகேஷ், செல்வம், அஸ்வின் என ஏழு பேர் இடம் பெற்றுள்ளனர். பாதயாத்திரையாக செல்லும் வழியில், நம்மாழ்வார் வழிமுறைகளான விவசாயிகள் மற்றும் மக்களுக்கு மண்வளத்தை, நீர் வளங்களை பாதுகாத்து மீட்டெடுக்க, மரபு விதைகளை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !