போக்சோவில் பெயின்டர் கைது
கோபி:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் அரவிந்த், 23, பெயின்டர்; இவருக்கும் கவுந்தப்பாடியை சேர்ந்த, 16 வயது இளம்பெண்ணுக்கும், இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது. கடந்த, 22ல் இளம்பெண்ணுடன் மாயமானார். இளம்பெண்ணின் பெற்றோர் கவுந்தப்பாடி போலீசில் புகாரளித்தனர். போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து அரவிந்த்தை போலீசார் கைது செய்தனர்.