உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பளார் ஆசிரியர் டிரான்ஸ்பர்

பளார் ஆசிரியர் டிரான்ஸ்பர்

அந்தியூர், அந்தியூர் அருகேயுள்ள மைக்கேல்பாளையத்தை சேர்ந்தவர் மரிய ஜோசப். அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர். பிளஸ் 1 உயிரியல் பிரிவு மாணவன் பிரேமை, 17, விடைத்தாளை கசக்கி விட்டதாக கன்னத்தில் அறைந்தார்.இது தொடர்பாக அந்தியூர் போலீசார் விசாரிக்க பள்ளிக்கு சென்றபோது தலைமறைவனார். அதேசமயம் சி.இ.ஓ.,வை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். ஆனாலும் அவர் மீது விசாரணை நடத்தி, பள்ளிக்கல்வி இணை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.சரியாக பாடம் நடத்தாதது, வகுப்புக்கு சரிவர செல்லாதது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை