உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஞ்., கட்டடத்தை இடித்த கூலி தொழிலாளி சாவு

பஞ்., கட்டடத்தை இடித்த கூலி தொழிலாளி சாவு

சத்தியமங்கலம், டிச. 29-கடம்பூரை அடுத்த மாக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சிக்கமாதன், 36; கூலி தொழிலாளியான இவர், கேர்மாளம் பகுதியில், பழைய பஞ்சாயத்து கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்தபோது இடிபாடு விழுந்ததில் படுகாயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து ஆசனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !