உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சின்னியம்பாளையத்தில் தொடர் திருட்டால் பீதி

சின்னியம்பாளையத்தில் தொடர் திருட்டால் பீதி

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே சின்னியம்பாளையம் லட்சுமி நகரில் வசிப்பவர் வெங்கடாசலம், 46; தனியார் நிறுவன ஊழியர். இவர் மனைவி மகேஸ்வரி, 44; கூட்டுறவு சொசைட்டி விற்பனையாளர். இரு மகன்கள் உள்ளனர். கடந்த 14ல் குடும்பத்துடன் திருப்பதி சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர். முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். பீரோவும் உடைக்கப்பட்டு, இரண்டரை பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், 15 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரிய வந்தது. வெங்கடாசலம் புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த, 14ம் தேதி இரவில் மட்டும் ஆளில்லாத வீடுகளை குறிவைத்து, நான்கு வீடுகளில் திருட்டு நடந்துள்ளது. இதனால் சின்னியம்பாளையம் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை