உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலையோர பள்ளத்தில் பாய்ந்த பஸ் காயமின்றி உயிர் தப்பிய பயணிகள்

சாலையோர பள்ளத்தில் பாய்ந்த பஸ் காயமின்றி உயிர் தப்பிய பயணிகள்

பு.புளியம்பட்டி, சத்தியமங்கலத்தில் இருந்து, 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, அரசு பஸ் ஒன்று நேற்று மதியம், கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. டிரைவர் சரவணன் ஓட்டினார். கண்டக்டராக ராமசாமி இருந்தார். சத்தியமங்கலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், விண்ணப்பள்ளி காந்தி பாலிடெக்னிக் கல்லுாரி அருகே பஸ் சென்றபோது, பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி, திடீரென வலது புறம் திரும்பியதால், அரசு பஸ் டிரைவர் லாரி மீது மோதாமல் தவிர்க்க, பஸ்சை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் லாரியின் பக்கவாட்டில் மோதி, வலதுபுற சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். பஸ் முன் பக்க கண்ணாடி உடைந்தது. இதையடுத்து பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டு, மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி