பஸ் ஸ்டாண்டில் டூவீலர்கள் செல்வதால் பயணிகள் அவதி
கோபி, கோபி பஸ் ஸ்டாண்டுக்குள், டூவீலர்கள் செல்வதால், பஸ் பயணிகள் அவதியுறுகின்றனர்.கோபி பஸ் ஸ்டாண்டுக்கு, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால், எந்நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பஸ் ஸ்டாண்டுக்குள், நாளுக்கு, நாள் டூவீலர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தாறுமாறாக, அதிவேகமாக, கோபி பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லும் டூவீலர்களால் பயணிகள் அவதியுறுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகமும், போக்குவரத்து பிரிவு போலீசாரும் இணைந்து, பஸ் ஸ்டாண்டில் டூவீலர்களை ஓட்டும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.