மேலும் செய்திகள்
காங்கேயம் ஒன்றியத்தில் திட்டப்பணிகள் ஆய்வு
11-Nov-2024
அரசு பள்ளி கட்டடங்கள் திறப்பு விழா
09-Nov-2024
படியூர் ஊராட்சி மன்ற தலைவர்அரசுப்பள்ளிக்கு ரூ.5 லட்சம் நிதிகாங்கேயம், நவ. 29-காங்கேயம் அருகேயுள்ள படியூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு, படியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம், தன் சொந்த செலவில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு வகுப்பறைகளுக்கு நுண் திறன் வசதி (ஸ்மார்ட் கிளாஸ்) செய்து கொடுத்துள்ளார். இந்த வகுப்பறைகள் திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், வகுப்பறைகளை திறந்து வைத்தார். பின் வகுப்பறையில் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து நுண் திரையில் ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனித்தார்.படியூர் ஊராட்சி இந்திரா நகரில் பயன்பாட்டில் இல்லாத இரண்டு திறந்தவெளி பொது கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை அமைச்சர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் காங்கேயம் தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் சிவானந்தன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனரணி அமைப்பாளர் சண்முகசுந்தரம், மாவட்ட, ஒன்றிய, கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
11-Nov-2024
09-Nov-2024