உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தபால் அலுவலக வளாகத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தபால் அலுவலக வளாகத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலக வளாகத்தில், ஓய்வூதியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். அஞ்சல் ஆர்.எம்.எஸ்., ஓய்வூதியர் சங்க செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சின்னசாமி, பொருளாளர் பாலமோகன்ராஜ், அகில இந்திய பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் மணியன் ஆகியோர் பேசினர். புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூ-திய திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மீண்டும், பழைய ஓய்-வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். பி.எஸ்.என்.எல்., ஓய்வூ-தியர்களுக்கு, 2017 ஜனவரி முதல் ஓய்வூதிய மறுநிர்ணயம் செய்ய வேண்டும்.வங்கி ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் செய்ய வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு, 8 வது ஊதியக்குழு அமைக்க வேண்டும். முடக்கப்பட்ட பஞ்சப்படியை உடன் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலு-கைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ