உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியதாரர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியதாரர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு:ஈரோடு தலைமை தபால் நிலையம் முன், சிவில் ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட செயலர் சின்னசாமி, நிர்வாகிகள் பன்னீர்செல்வம், ஸ்ரீதரன், திருநாவுக்கரசு, ஜெயசங்கர், ராமசாமி உட்பட பலர் பேசினர்.பென்ஷன் திருத்த சட்டம்-2025ஐ மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 2026க்கு முன் பணி நிறைவு பெற்றவர்களுக்கும் பென்ஷன் மாற்றம் செய்திடும் வகையில், 8வது ஊதியக்குழு பரிந்துரையை மாற்றியமைக்க வேண்டும். 50 சதவீத டீ.ஏ., - டீ.ஆர்.,ஐ ஊதியம் அல்லது ஓய்வூதியத்துடன் சேர்க்க வேண்டும். காப்பீட்டில் உள்ள மருத்துவ பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.கன்வீனர் பரமசிவம் நன்றி கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை