உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புன்செய்புளியம்பட்டியில் தொடர் திருட்டு குற்றவாளிகள் சிக்காததால் மக்கள் அச்சம்

புன்செய்புளியம்பட்டியில் தொடர் திருட்டு குற்றவாளிகள் சிக்காததால் மக்கள் அச்சம்

புன்செய்புளியம்பட்டி :புன்செய்புளியம்பட்டியை அடுத்த தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் அருள் பிரகாஷ். 40; இவரது வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த தங்க கம்மல், மோதிரம், பிரேஸ்லெட் உள்ளிட்ட மூன்றரை பவுன் நகை, 10 ஆயிரம் இந்திய ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர் கடந்த ஆக.,27ல் திருட்டு போனது. அதே இரவில் புன்செய்புளியம்பட்டி-பவானிசாகர் சாலை கணேசபுரம் லட்சுமி, 58, வீட்டில், 3 பவுன் தங்க செயின், மோதிரம், கம்மல் உள்ளிட்ட ஆறு பவுன் தங்க நகையை திருடி சென்றனர். அதே பகுதியில் ஒரு வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. தொடர் திருட்டு சம்பவங்களால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அதேசமயம் கொள்ளை சம்பவங்களில் திருடர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதுகுறித்து மக்கள் கூறியதாவது: புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கிராமங்களில், ஆடுகள் திருடு போகும் சம்பவங்கள் நடந்த நிலையில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ஆடுகள் மீட்கப்பட்டன. தற்போது பட்டப்பகலில் வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு நடக்கிறது. போலீசார் முறையாக ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபடாததே காரணம். இதை தடுக்க இரவில் ரோந்து மற்றும் கண்காணிப்பில் போலீசார் ஈடுபட வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !