கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய விவகாரம் ஆய்வு செய்ய வந்த தாசில்தாரை மக்கள் முற்றுகை
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய விவகாரம்ஆய்வு செய்ய வந்த தாசில்தாரை மக்கள் முற்றுகைபுன்செய் புளியம்பட்டி, அக். 22-புன்செய்புளியம்பட்டி நகராட்சி, 14வது வார்டு தோட்ட சாலை, சருகு மாரியம்மன் கோவில் வீதி, அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 30-க்கும் மேற்பட்ட மக்கள், நகராட்சி பொறியாளர் கவிதாவிடம் நேற்று மனு வழங்கினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:தோட்டசாலை, அம்மன் நகர் வழியாக மழைநீர் ஓடையானது நொச்சிக்குட்டை குளம் முதல் காவிலிபாளையம் குளம் வரை செல்கிறது. இந்த மழைநீர் ஓடையில் நகராட்சி கழிவுநீரும் செல்வதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இந்நிலையில் மழை நீர் ஓடையை ஆக்கிரமித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படுகிறது. இதனால் மேற்கண்ட பகுதி வீடுகளில், மழை காலத்தில் கழிவு நீருடன் மழை நீர் புகுந்து விடுகிறது. மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறிடத்தில் அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.தாசில்தாரை முற்றுகைகழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பாக, அப்பகுதி மக்கள் ஏற்கனவே கலெக்டர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியிருந்தனர். இதன் அடிப்படையில் சத்தி தாசில்தார் சக்திவேல், நேற்று மாலை, ௫:௦௦ மணிக்கு இப்பகுதிக்கு வந்தார். மழைநீர் ஓடையில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதையறிந்து சென்ற மக்கள், தாசில்தாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து நகராட்சி அதிகாரிகளும் சென்றனர். மழைநீர் வீடுகளுக்குள் புகாதபடி வடிகால் அமைக்கப்பட்டு கான்கிரீட் தளம் அமைக்கப்படும் என தாசில்தார் உறுதியளித்தும், மக்கள் ஏற்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தாசில்தார், 7:00 மணிக்கு புறப்பட்டு சென்றார்.