பறவைகள் சரணாலயத்தில் பொழுதை கழித்த மக்கள்
ஈரோடு, ஈரோடு அருகே வெள்ளோட்டில், 77.85 ஹெக்டேர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் உள்ளது. விடுமுறை நாட்களில் மக்கள் இங்கு பொழுதை கழிக்க செல்வது வழக்கம். இந்த வகையில் தீபாவளி விடுமுறை தினமான நேற்று, காலையில் பட்டாசு வெடித்த மக்கள், அதன் பிறகு பொழுதை கழிக்க சரணாலயத்துக்கு படையெடுத்தனர். ஈரோடு, சென்னிமலை, பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் குவிந்தனர். சரணாலயத்தில் துாரத்து மரங்களில் முகாமிட்டிருந்த பறவைகளை ரசித்து, செல்பி பாயிண்டில் மொபைலில் படம் எடுத்து மகிழ்ந்தனர். வழக்கமாக சரணாலயத்தில் பறவைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். நேற்று மக்கள் குவிந்ததால், பறவைகளின் எண்ணிக்கையை முந்தினர்.