உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஸ்சை சிறைபிடித்த மக்கள்

பஸ்சை சிறைபிடித்த மக்கள்

பஸ்சை சிறைபிடித்த மக்கள்தாராபுரம், நவ. 12-தாராபுரத்தில் இருந்து பழனி செல்லும் தனியார் பேருந்துகள், புறநகர் பகுதியான கொளிஞ்சிவாடி, உப்புத்துறைபாளையம் வழியாக செல்வது வழக்கம். சமீப காலமாக பைபாஸ் சாலை வழியாக செல்வதால், இப்பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை உப்புத்துறைபாளையம் வழியே வந்த ஒரு தனியார் பஸ்சை, 50-க்கும் மேற்பட்ட மக்கள் சிறைபிடித்தனர். இவ்வழியாக வராதது ஏன்? என்று டிரைவரிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வருவாய் துறை அதிகாரிகள், மக்களை சமரசம் செய்து பஸ்சை விடுவித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ