உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நத்தக்காடையூர் அருகே குடிநீர் வழங்க கோரி மக்கள் மறியல்

நத்தக்காடையூர் அருகே குடிநீர் வழங்க கோரி மக்கள் மறியல்

காங்கேயம்: நத்தக்காடையூர் அருகே, சீரான குடிநீர் வழங்க கோரி பொது-மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஒன்றியம் நத்தக்காடையூர் ஊராட்சிக்குட்பட்ட புதுசக்கரபாளையத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமும், அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த சில மாதங்களாக, காலை நேரத்தில் குடிநீர் வழங்காமல், மாலை நேரத்தில் குடிநீர் வழங்குவதாகவும், அதுவும் குறைந்த அளவில் வழங்குவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாக தெரிவித்தனர். நேற்று காலை, 10:00 மணியளவில் அப்பகுதி மக்கள், 50க்கும் மேற்பட்டோர் நத்தக்காடையூர் ஈரோடு ரோடு, பாளையங்கோட்டை பகுதியில் சாலை மறியல் போராட்-டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த காங்கேயம் போலீசார் மற்றும் நத்தக்காடையூர் ஊராட்சி தலைவர் செந்தில்-குமார் ஆகியோர், பொதுமக்களிடம் சமாதானம் செய்து, தினமும் குடிநீர் வழங்குவதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால், 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை