உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொடர் மின்வெட்டை கண்டித்து மக்கள் மறியல் போராட்டம்

தொடர் மின்வெட்டை கண்டித்து மக்கள் மறியல் போராட்டம்

அந்தியூர்:வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள எண்ணமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இதுகுறித்து, அந்தியூர் மின்வாரிய அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று காலை 11:00 மணிக்கு எண்ணமங்கலம் பஸ் ஸ்டாப்பில், அந்தியூர் செல்லும் அரசு பஸ்சை சிறை பிடித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு, மின்வாரிய அலுவலர்கள், சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில், ஒரு வாரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியலால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ