உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

அந்தியூர் :வெள்ளித்திருப்பூர் பஞ்., குரும்பபாளையத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆற்று குடிநீர் வினியோகம் செய்யக்கோரி, ஓராண்டுக்கும் மேலாக அம்மாபேட்டை யூனியன் அலுவலகம், வெள்ளித்திருப்பூர் பஞ்., நிர்வாகத்திடம் மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று காலை, 40க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள், குரும்பபாளையத்தில் பஸ்ஸை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்மாபேட்டை பி.டி.ஓ., மனோகரன், வெள்ளித்திருப்பூர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுப்பதாக கூறவே, மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை