குடிநீர் கேட்டு மக்கள் மறியல்
சத்தியமங்கலம்:தாளவாடி யூனியன் ஆசனூர் பஞ்., பங்களாதொட்டி, ஜெ.ஜெ.நகரில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் நேற்று காலை, 50க்கும் மேற்பட்ட பெண்கள், மைசூரு சாலையில் மறியல் செய்தனர். ஆசனுார் போலீசார், யூனியன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வினியோகிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறவே, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.