உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் பிடிபட்ட அரிய வகை அதிசய பாம்பு தொடர்ந்து சிக்குவதால் மக்களுக்கு எச்சரிக்கை

ஈரோட்டில் பிடிபட்ட அரிய வகை அதிசய பாம்பு தொடர்ந்து சிக்குவதால் மக்களுக்கு எச்சரிக்கை

ஈரோடு, ஈரோடு ரயில்வே காலனி விளையாட்டு மைதானத்தில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், வாலிபால், பேட்மிட்டன் பயிற்சி பெற்று வருகின்றனர். மைதானம் அருகில் கட்டுமான பணிக்கு தோண்டிய குழியில் நேற்று ஒரு பாம்பு நடமாடியது. இதைப்பார்த்த ஒரு மாணவர் அலறியடித்து ஓடி வந்தார். இதுகுறித்து பாம்புபிடி வீரர் யுவராஜுக்கு தகவல் தரப்பட்டது.குழிக்குள் படுத்திருந்த கண்ணாடி விரியன் பாம்பை பிடிக்க இறங்கியபோது, ஆக்ரோஷமடைந்து சீறியது. இதனால் பாம்பின் மீது தண்ணீரை ஊற்றி சமாதானம் செய்து பிடித்தார். இதேபோல் மூலப்பாளையம் அசோக் நகரில் அரசுப்பள்ளி ஆசிரியர் குணசேகரன் வீட்டு தோட்டத்தில், விஷ தன்மையற்ற அரிய வகையை சேர்ந்த மோதிர வளையன் எனப்படும் பாம்பு, மாணிக்கவாசகர் காலனியில் மருந்து கடை உரிமையாளர் சுரேஷ் வீட்டு தோட்டத்தில், சாரை பாம்பும் நேற்று அடுத்தடுத்து பிடிக்கப்பட்டது. மூன்று பாம்புகளும், ஈரோட்டில் ரோஜா நகரில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.இதுகுறித்து பாம்புபிடி வீரர் யுவராஜ் கூறியதாவது:சமீப காலமாக மாநகரில் உள்ள வீடுகளில் பாம்புகள் குடியேறுவது அதிகமாகி வருகிறது. இதற்கு காரணம் காடுகளாக இருக்கும் பகுதிகளில் வீடு கட்டுவது அதிகமாகி விட்டது. இதனால் அங்கிருக்கும் பாம்புகள் இடம் பெயர்ந்து வருகின்றன. வீட்டுக்கு வெளியில் போட்டு வைக்கப்படும் தேவையற்ற பொருட்களில் தஞ்சமடைந்து, எலிகளை உணவாக சாப்பிட்டு வாழ தொடங்குகின்றன. அதேபோல 'ஏசி' போன்ற உபகரணங்களுக்கு பயன்படுத்தப்படும் பைப் லைன் திறந்த வெளியில் இருப்பதால், அதன் வழியாக வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. எனவே மக்கள், தங்களது வீடுகளில் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி, பைப் லைன்களை மூடி வைத்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி