உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகர் அணையில் உபரி நீர் திறக்க வாய்ப்பு மக்களுக்கு எச்சரிக்கை

பவானிசாகர் அணையில் உபரி நீர் திறக்க வாய்ப்பு மக்களுக்கு எச்சரிக்கை

பவானிசாகர், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி, 101.52 அடியாக இருந்தது. அணை நீர்மட்டம், 102 அடியை எட்டியவுடன், உபரிநீர் வெளியேற்றப்படும். இதனால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பவானி ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அணைக்கு நீர்வரத்து, 3,987 கன அடியாக உள்ளது. இதனால் எந்நேரத்திலும் அணை நீர்மட்டம், ௧௦௨ அடியை எட்ட வாய்ப்புள்ளது. எட்டிய மறுவிநாடி பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ