உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஆர்வத்துடன் மனு கொடுத்த மக்கள்

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஆர்வத்துடன் மனு கொடுத்த மக்கள்

ஈரோடு, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை, முதல்வர் ஸ்டாலின் சிதம்பரத்தில் நேற்று துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்துக்கான முகாம் துவக்க நிகழ்ச்சி, கலெக்டர் கந்தசாமி தலைமையில், ஈரோடு பிளாட்டினம் மஹாலில் நடந்தது. இங்கு, 13 துறைகள் சார்ந்த ஸ்டால் அமைத்து, அலுவலர்கள் கணினியுடன் அமர்ந்திருந்தனர். மகளிர் உரிமைத்தொகை, மகளிர் குழு கடன், தொழிலாளர் நலத்துறை கோரிக்கை, நலவாரிய பதிவு, மாற்றுத்திறனாளிகள் நல கோரிக்கை என பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை, மக்கள் வழங்கினர். மாவட்ட அளவிலான அதிகாரிகள் பங்கேற்றதால், சில மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கிடைத்தது.பின், வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆய்த்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பெற்று, நலத்திட்ட உதவி வழங்கி பேசியதாவது:மாவட்டத்தில் இங்கு துவங்கிய முகாமுடன் அக்., மாதம் வரை, 340 முகாம் நடத்தப்படும். முகாம் துவங்கியதும், மகளிர் உரிமைத்தொகைக்கு, 100, பிற கோரிக்கை மனு, 300 பெறப்பட்டது. ஒரே நாளில், 3,000 மனு பெறப்படும் என எதிர்பார்க்கிறோம்.மாநகரில், 2, 3, வார்டுகளை இணைத்து முகாம் நடக்கும். பிற பகுதிகளில் முறையான அறிவிப்பு செய்து முகாம் நடத்தப்படும். இங்கு நடக்கும் முகாமில் பெறப்படும் மனுக்கள், 45 நாளில் தீர்வு காணப்படும். இவ்வாறு கூறினார்.நிகழ்ச்சியில் எம்.பி.,க்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ், எம்.எல்.ஏ., சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி