பெருந்துறையில் நாளை மக்கள் குறை கேட்பு
பெருந்துறை:மக்கள் குறை கேட்பு, மனுக்கள் பெறும் முகாம், பெருந்துறை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சக்தி திருமண மண்டபத்தில் நாளை காலை, 9:00 மணி முதல் நடக்கிறது. முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன், கலெக்டர் கந்தசாமி ஆகியோர், மனு பெறுகின்றனர். முகாமில் வருவாய் துறை மட்டுமின்றி, பல்வேறு துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர். ஒன்றுக்கும் மேற்பட்ட கோரிக்கை இருந்தால், ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி மனுக்களாக, ஆவண நகல்களுடன் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.