மேலும் செய்திகள்
கான்கிரீட் சாலை பணி தொடக்கம்
14-Sep-2024
ஈரோடு: பவானி தாலுகா கவுந்தப்பாடி பஞ்., மக்கள், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு வழங்கி கூறியதாவது: கவுந்தப்பாடி பஞ்சாயத்தாக செயல்படுகிறது. முற்றிலும் தொழில் வளர்ச்சி இல்லாத கிராமம். விவசாயம், விவசாய தொழில் சார்ந்த பணிகள் செய்து வருகின்றனர். விவசாய கூலி வேலையுடன், நுாறுநாள் வேலை திட்டப்பணி செய்கிறோம். இச்சூழலில் கவுந்தப்பாடியை டவுன் பஞ்., ஆக தரம் உயர்த்த பரிந்துரைத்து, விரைவில் உத்தரவு வரவுள்ளது. டவுன் பஞ்., ஆக மாறினால், நுாறு நாள் வேலை திட்டப்பணி நிறுத்தப்படும். எங்களுக்கு வேலை, வாழ்வாதாரம் பாதிக்கும். வரிகள் உயரும். எனவே டவுன் பஞ்சாயத்தாக தரம் உயர்த்தக்கூடாது. இவ்வாறு கூறினர்.
14-Sep-2024