உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வண்டல் மண் எடுக்கும் விவகாரம் தடை வாகனங்களுக்கு அனுமதி

வண்டல் மண் எடுக்கும் விவகாரம் தடை வாகனங்களுக்கு அனுமதி

புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் அணை நீர் தேக்கத்தில் இருந்து, விவசாய பயன்பாட்டுக்காக, இலவசமாக வண்டல் மண் எடுத்துக்கொள்ள விவசாயிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் வண்டல் விற்பனை நோக்கத்தில் வேறு இடங்களில் கொட்டியதாக, வருவாய் துறையினர், 80 வாகனங்களுக்கு வண்டல் மண் எடுக்க தடை விதித்தனர். இதற்கு விவசாயிகள் மற்றும் லாரி உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்ததால், வண்டல் மண் எடுக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் தடை விதிக்கப்பட்ட, 80 வாகனங்களின் உரிமையாளர்கள் உரிய விளக்க கடிதம் கொடுத்துவிட்டு எடுத்து செல்லுமாறு வருவாய் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொள்ளாத விவசாயிகள் தடை விதிக்கப்பட்ட 80 வாகனங்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை காராச்சிகொரை வன சோதனை சாவடியில் நிறுத்தி வைத்தனர். நேற்று மதியம் விளக்க கடிதம் கொடுத்ததால், 80 வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதாக, சத்தியமங்கலம் தாசில்தார் ஜமுனாராணி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை