உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனு அனுப்பும் போராட்டம்

மனு அனுப்பும் போராட்டம்

கோபி:தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம், கோபி கோட்டம் சார்பில், தமிழக முதல்வர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு, கோட்ட பொறியாளர் மூலம், கோரிக்கை மனு அனுப்பும் போராட்டத்தில் கோபியில் நேற்று ஈடுபட்டனர். கோட்ட தலைவர் முருகவேல் தலைமை வகித்தார். சாலைப்பணியாளர்களின், 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆவணம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர் பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும். உயிரிழந்த பணியாளர் குடும்பத்திலிருந்து கருணை பணி வேண்டி விண்ணப்பித்த அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை