/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் கலெக்டர் அலுவலகத்தில் மனு
தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் கலெக்டர் அலுவலகத்தில் மனு
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தமிழக எழுச்சி பேரவை சார்பில் மனு வழங்கி கூறியதாவது:தமிழகத்தில் கடைகள், அனைத்து வணிக, வர்த்தக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க கடந்த மார்ச், 11ல் திருத்தப்பட்ட அரசாணை வெளியிட்டு, தமிழ் மொழி எழுத்துக்களை முதன்மையாக்கி பெயர் பலகை அமைக்க வேண்டும். இரண்டாம் மொழியான ஆங்கில எழுத்துக்களை சிறியதாக பயன்படுத்த அரசு அறிவுறுத்தியிருந்தது.ஆனால், ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான நிறுவனங்கள், கடைகளின் பெயர் பலகைகள் தமிழ் எழுத்துக்களில் இல்லை. ஆங்கில எழுத்துக்களே பிரதானமாக உள்ளன.இதுபோன்ற நிறுவனங்களை கண்டறிந்து, 20,000 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.