பேரன்களை பராமரிக்க நிவாரண நிதி கோரி மனு
ஈரோடு: அந்தியூர் தாலுகா செம்புளிச்சாம்பாளையம், காந்திபுரம் கால-னியை சேர்ந்த தம்பதி நாராயணன் - பழனியம்மாள். தங்களின் எட்டு வயது, நான்கு வயது பேரன் என இருவருடன், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது:நாங்கள் துாய்மை பணியாளராக பணி செய்து வருகிறோம். இளைய மகன் செல்வகணபதி மனைவி சவுந்தர்யா, 24; இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கடந்த அக்.,7ல் நடந்த கார் விபத்தில் மருமகள் இறந்து விட்டார். இந்த துக்கம் தாளாமல் மகன் கடந்த மாதம் இறந்தார். தற்போது அவர்களது இரண்டு குழந்தைகளையும் நாங்கள் வளர்த்து வருகிறோம். எங்களுக்கு வயதான நிலையில், குழந்தை-களின் கல்வி, பிற வசதிகளுக்கு, முதல்வரின் நிவாரண நிதி மூலம் தொகை வழங்கி உதவ வேண்டும். இவ்வாறு கூறினர்.