உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவில் பாதையை மறித்து கம்பி வேலி அமைப்பு நேர்மையான தீர்வு கோரி எஸ்.பி.,யிடம் மனு

கோவில் பாதையை மறித்து கம்பி வேலி அமைப்பு நேர்மையான தீர்வு கோரி எஸ்.பி.,யிடம் மனு

ஈரோடு, பவானி தாலுகா, ஜம்பை, துருசாம்பாளையத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் நடராஜன் தலைமையில், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது:ஜம்பை துருசாம்பாளையத்தில் கருப்பு சுவாமி கோவிலில் பூசாரியாக பணி செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவிழா நடக்கும். திருவிழா மற்றும் பிற காலங்களிலும் நான் மற்றும் கருப்பண்ணன், சக்திவேல் ஆகியோர் பூசாரியாக பூஜை உட்பட பணிகள் செய்கிறோம். அதே பகுதி சத்தியசீலன் மற்றும் அவரது முன்னோர்கள், இக்கோவிலுக்கு தர்மகர்த்தாவாக உள்ளனர். நாங்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கடந்த, 15ல் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுக்காக நாங்களும், மக்களும் சென்றோம். அப்போது சிலர் கோவிலுக்கு செல்லும் வண்டிப்பாதையை மறித்து கம்பி வேலி போட்டு விட்டனர். கோவிலில் திருவிழா, பூஜை நடத்தக்கூடாது என்று தகராறு செய்தனர். இதுபற்றி பவானி டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டரிடம் புகார் செய்தோம். தாசில்தார் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. இதில் எங்கள் தரப்பை கேட்காமல், ஒருதலைப்பட்சமாக நடந்து, எங்களை ஒருமையில் பேசுவதுடன் வழக்கு போடுவதாக மிரட்டுகின்றனர். இதுபற்றி விசாரித்து நேர்மையான தீர்வு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ