உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விசைத்தறி மானியம் முதல்வருக்கு மனு

விசைத்தறி மானியம் முதல்வருக்கு மனு

ஈரோடு, நாடா இல்லா விசைத்தறியாக மேம்படுத்த கூடுதல் மானியம் வழங்க, தமிழ்நாடு நெசவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அமைப்பாளர் கந்தவேல், முதல்வருக்கு மனு அனுப்பினார்.மனு விபரம்: தமிழகத்தில் இந்தாண்டு, 2,000 சாதா விசைத்தறிகளை நாடா இல்லா விசைத்தறிகளாக மேம்படுத்த, 1.5௦ லட்சம் செலவில், 75,000 ரூபாய் மானியமாக அரசு வழங்க, 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதி பற்றாக்குறையாகும். ஒரு விசைத்தறிக்கு, 1.5௦ லட்சம் ரூபாய் செலவாகும்போது, ஜி.எஸ்.டி., 17 சதவீதமாக, 27,000 ரூபாய் மத்திய, மாநில அரசுக்கு வழங்க வேண்டும். அரசின், 75,000 ரூபாயில், ஜி.எஸ்.டி.,யை கழித்தால் ஒரு தறிக்கு, 48,000 ரூபாய் மட்டுமே மிஞ்சும். எனவே, 2.5 லட்சம் ரூபாய் செலவில் சாதா விசைத்தறிகளை, 'டக் இன்' உடன் நாடா இல்லா விசைத்தறிகளாக, 1.25 லட்சம் ரூபாய் மானியம் ஒதுக்கி வழங்கினால் நெசவாளர் பயன் பெறுவர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ