உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஏலம் ரத்து கோரி கலெக்டரிடம் மனு

ஏலம் ரத்து கோரி கலெக்டரிடம் மனு

ஈரோடு, தமிழக ஹிந்து மக்கள் முன்னணி நிறுவன தலைவர் தமிழ்செல்வம் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது:ஈரோடு பகுதியில் நடந்த ஈமு கோழி மோசடி தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட நிலம் ஏலம் விடப்படுகிறது. கோபி தாலுகா சிறுவலுாரில் கடந்த, 9ல் ஏலம் நடந்தது. சுகுமார் என்பவர், 28.50 லட்சத்துக்கு நிலத்தை ஏலம் எடுத்தார். ஆனால், வேறு நபர் பெயரில் தொகைக்கான டி.டி., வழங்கப்பட்டது. அதே நிலத்தை வேறு நபருக்கு, 40 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இதன் மூலம் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. தவிர இது முறைகேடான செயலாகும். எனவே ஏலத்தை ரத்து செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ