உள்ளாட்சி இணைப்புகள் மறுபரிசீலனை முன்னாள் அமைச்சர் கலெக்டரிடம் மனு
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் தலைமையிலான அ.தி.மு.க., வினர், ஈரோடு கலெக்டர் அலுவல-கத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது:கோபி நகராட்சியுடன் கோபி யூனியனுக்கு உட்பட்ட பாரியூர், பா.வெள்ளாளபாளையம், குள்ளம்பாளையம், மொடச்சூர் பஞ்.,; பெரிய கொடிவேரி டவுன் பஞ்சாயத்துடன் டி.என்.பாளையம் யூனியன் அக்கரை கொடிவேரி பஞ்., இணைக்க அறிவித்துள்-ளனர். புன்செய் புளியம்பட்டி நகராட்சியுடன் நொச்சிகுட்டை, நல்லுார் பஞ்.,களை சேர்க்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக முன்-னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள ஏழைகள், நுாறு நாள் வேலை திட்டம் மூலம் வேலை செய்து வாழ்கின்றனர். இப்பகுதிகளை நகராட்சியுடன் இணைக்கும் பட்சத்தில், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கும். சொத்து வரி, குடிநீர் வரி, வீடு கட்டுமான வரைபட அனுமதி வரி போன்றவை உயர்ந்து மக்கள் பாதிப்பார்கள். இப்பகுதியில் விவ-சாய பூமி அதிகம் உள்ளதால், விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் பாதிக்கப்படும். எனவே இப்பஞ்.,களை நகராட்சி, டவுன் பஞ்.,களுடன் சேர்க்காமல் ஏற்கனவே உள்ளபடி செயல்-பட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறினர். எம்.எல்.ஏ., செங்-கோட்டையனுடன், பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி, முன்னாள் எம்.பி., சத்தியபாமா உட்பட பலர் வந்தனர்.