உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனுக்கள் வெறும் காகிதம் அல்ல; அது ரத்தம்,வியர்வை

மனுக்கள் வெறும் காகிதம் அல்ல; அது ரத்தம்,வியர்வை

கோபி, ''பொதுமக்களாகிய நீங்கள் வழங்கும் மனுக்கள், வெறும் காகிதம் அல்ல. அது உங்களுடைய ரத்தம், அது உங்களுடைய வியர்வை,'' என, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.கோபி யூனியனுக்கு உட்பட்ட சிறுவலுார் மற்றும் நாகதேவன்பாளையம் பஞ்சாயத்து மக்களுக்காக, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், கோபி அருகே சிறுவலுாரில் நேற்று நடந்தது. அப்போது அமைச்சர் மதிவேந்தன், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்ட பின் பேசியதாவது:அரசு சார்ந்த திட்டங்களை பெறவும், அடிப்படை பிரச்னை, தனிநபர் பிரச்னை என மக்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை நாட வேண்டியுள்ளது. அவ்வாறு மனுக்களை வழங்க செல்லும்போது, அதற்கான அதிகாரிகள் துறை ரீதியான கூட்டத்தில் பங்கேற்க சென்றிருக்கும் சமயங்களில், மனுதாரர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். எனவே உங்கள் சிரமத்தை போக்க, நீங்கள் வசிக்கும் பகுதிக்கு, அரசு துறை அதிகாரிகளை வரவழைத்து, இதுபோன்ற முகாம் நடத்தப்படுகிறது. நாங்களே உங்களை தேடி வந்து, மனுக்களை பெறுகிறோம். பொதுமக்களாகிய நீங்கள் வழங்கும் மனுக்கள், வெறும் காகிதம் அல்ல. அது உங்களுடைய ரத்தம், அது உங்களுடைய வியர்வை. எனவே அதற்கு அதிக முக்கியத்துவம் தரவே, முதல்வரின் உத்தரவுப்படி, மனுக்களை பெறுகிறோம்.இவ்வாறு பேசினார்.டி.ஆர்.ஓ., சாந்தக்குமார், தி.மு.க., துணை பொதுச்செயலர் அந்தியூர் செல்வராஜ், வடக்கு மாவட்ட செயலர் நல்லசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை