உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மருந்து விற்பனை பிரதிநிதிகள் மனு

மருந்து விற்பனை பிரதிநிதிகள் மனு

ஈரோடு, நவ. 23-அகில இந்திய மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சம்மேளனம் சார்பில், நிர்வாகிகள் சுரேஷ்பாபு, சங்கரன், கோபிநாத் ஆகியோர், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், மனு வழங்கினர். மனுவில் கூறியதாவது: மருந்து விற்பனை பிரதிநிதிகள் உட்பட விற்பனை அபிவிருத்தி பணியாளர்களுக்கு நிலையான வேலை விதிகள் வரையறுத்து வழங்க வேண்டும். விற்பனை அபிவிருத்தி பணியாளர்கள் சட்டம்-1976 (எஸ்.பி.இ., சட்டம்) ஐ, நீர்த்து போக செய்யும், 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். எஸ்.பி.இ., சட்டத்தை மதிக்காத நிறுவனங்களை தண்டிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கை மனுவை, மத்திய அரசின் தொழிலாளர் துறைக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தினர்.விபத்தில் முதியவர் பலிகோபி, நவ. 23-கோபி அருகே எலந்தைக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம், 78; கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மதியம் கொளப்பலுார் சாலையில், டி.வி.எஸ்.,50 மொபெட்டில் சென்றார். எதிரே வந்த மகேந்திரா பிக்-அப் சரக்கு ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இறந்த செல்வத்தின் மனைவி அன்னக்கொடி புகாரின்படி, சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை